|
தனியே வந்த ஆசிரியத்தாழிசைக்குச் செய்யுள் : |
| `சத்தமும் ஆகிஅச் சத்தத் தாற்பெறும் அத்தமும் ஆகலின் அநந்தன் கண்களே உத்தமன் ஐந்தெழுத் துருவம் காண்பன.' | | | - சி.செ.கோ. 46 | | |
எருத்தடி குறைந்த ஆசிரியத் துறைக்குச் செய்யுள் : |
| `நாகம் பொதிசடைமேல் நாள்மதியும் வாள்மதிபோல் நங்கை கங்குல் மேகம்செய் கூந்தல் மிலைச்சும் தலைக்கலனும் விளங்கும் தோற்றம் ஆகம் பகுந்தளித்த அந்நாளில் அம்பலத்தான் மாகம் பதியும் மதியும் பகுந்தளித்த வண்ணம் போலும்' | | | - 48 | | |
|
இடைஇடை குறைந்து வந்த ஆசிரியத் துறைக்குச் செய்யுள் : |
`உண்டாங் கெனினும் இலதென் றறிஞர்கள் பொய்யெனப் புகலவும் மெய்யெனப் பெயர்பெற்று உன்னாமுனம் இன்னாமென உளதாய் மாய்வது நிலையில் யாக்கை; கண்டாங் கிகழும் கிழமுதிர் அமையத்து ஐவளி பித்தெனும் மெய்தரும் வித்தில் கடலில் திரையென உடலில் திரையொடு கலியா நின்றன நலிவுசெய் நோய்கள்; புண்தாங் கயில்முக் குடுமிப் படையொடும் எயிறலைத் தழல்விழித் துயிருணக் கனல்சேர் புகையாமென நிழலாமெனத் திரியாநின்றது கொலைசெய் கூற்றம். விண்டாங் ககலுபு மெய்ப்பொருள் துணிவோர் மின்பொலி பொன்புனை மன்றிலெம் உயிராம் விமலன் குஞ்சித கமலம் கும்பிட வேண்டுவர் வேண்டார் விண்மிசை உலகே.' | | | - 50 | | |
(முதலடியும் மூன்றாமடியும் 14 சீர் - ஏனை இரண்டும் 16 சீர்) |