எருத்தடி குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரியத் துறைக்குச் செய்யுள்: |
| `மாயிரு ஞாலத்து மன்னுயிர் கண்களிப்ப மன்று ளாடும் நாயகன் கண்டம் கறுத்தன்றே பொன்னுலகை நல்கிற் றம்மா, நாயகன் கண்டம் கறாதேலந் நாட்டமரர் சேயிழை மாதருக்குச் செங்கைகளும் கொங்கைகளும் சிவக்கும்போலும்.' | | | - சி. செ. கோ. 51 | | |
இடைஇடை குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரியத் துறைக்குச் செய்யுள் : |
| `திங்கட் சடைக்கற்றைப் புத்தேள் திருமார்பில் பைங்கண் தலைகள் பலவும் நகுவ போலுமால்; பைங்கண் தலைகள் பலவும் நகுவகண்டு, அங்கட் கமலத்து அயனும் மாலும் அழுவரால்' | | | - 51 | | |
(இது முதலடியும் மூன்றாமடியும் நாற்சீர், ஏனைய ஐஞ்சீர் பெற்று இடைமடக்காய் வந்தது.) |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்: |
| `கனம ளித்தபைங் காவில்வெண் டரளமும் பவளமும் கமகீனப் புனம ளித்தபூங் கொன்றைபொன் சொரிதரப் புண்ணிய மலர்தில்லை வனம ளித்ததே எனினுமோ ரானந்த மாக்கடற் றிளைத்தாடும் அனம ளித்தஏழ் பொழிற்குமோர் பலமென்ப தன்பொனம் பலந்தானே,' | | | - 52 | | |