|
| `வெண்தளை தன்தளை விரவி வருவது பிரிந்திசைத் துளலெனப் பேசப் படுமே.ழு | | | 46 | | |
| `இவ்விரு தளையும் பிறவும் மயங்கித் தொடருவ தகவல் துள்ளலா மெனலே.ழு | | | 47 | | |
27 |
கலிப்பா வகை |
737. | ஒத்தா ழிசைக்கலி வெண்கலிப் பாவே கொச்சகக் கலியொடு கலிமூன் றாகும். | | | -யா. கா. 22 மே. | | |
இது மேல் பொதுவகையால் கூறிய கலிப்பா வகை இத்துணைத்து என்கின்றது. இ-ள் : ஒத்தாழிசைக் கலியும் வெண்கலியும் கொச்சகக் கலியும் என முற்கூறிய கலிப்பா மூன்று வகைப்படும் என்றவாறு. |
ஒத்த நூற்பாக்கள் |
முழுதும் - யா. வி. 79 நற்றத்தம் |
| `வெண்கலி ஒத்தா ழிசைக்கலி கொச்சகம் என்றொரு மூன்றே கலிஎன மொழிப.ழு | | | - காக்கை | | |
| `கொச்சகம் வெண்கலி ஒத்தா ழிசைஎன முத்திற மாகும் கலியின் பகுதி.ழு | | | - சங்கயாப்பு | | |
| `ஒத்தா ழிசைக்கலி வெண்கலிகொச் சகமென முத்திறத் தான்வரும் கலிப்பா என்ப.ழு | | | - அவிநயம் | | |
| `ஒத்தா ழிசைக்கலி வெண்கலி கொச்சகம் முத்திறத் தடங்கும் எல்லாக் கலியும்.ழு | | | - மயேச்சுரம் | | |
| `ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே கொச்சகம் உறழொடு கலிநால் வகைத்தே.ழு | | | - தொ.பொ.442 | | |
|