158 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | இ-ள் : முன் ஒரு தரவு வந்து அதன் பின்பு மூன்று தாழிசை வந்து அவற்றின் பின்னர்த் தனிச்சொல் வந்து அதன் பின்னர்ச் சுரிதகஉறுப்பு வந்து நடப்பது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவாம் என்றும், நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவினுள் தாழிசைக்கும் தனிச்சொற்கும் இடையே நாற்சீரடியும் முச்சீரடியும் முறையான் அமைந்த இருசீரடியும் ஆகிய அசையடிகள் தோன்றிய நீர்த்தரங்கம் கரைசாரக் கரைசார ஒரு காலைக்கு ஒருகால் சுருங்கி வருமாறு போலக் குறைந்து வருமாயின் அத்தன்மையது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவாம் என்றும், அவ்வம்போதரங்க உறுப்பிற்கு மேல் இடத்தாய்த் தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் என்னும் நான்கு உறுப்போடும்கூட அராக உறுப்பு வந்து இயையுமாயின் அது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவாம் என்றும், வேற்றுத்தளை தட்டு வேற்று ஓசை தழுவியும் வெண்டளை தட்டு வெள்ளோசை தழுவியும் ஈற்றடி முச்சீரான் முடியுமாயின் முறையே வெண்கலிப்பாவாம் என்றும், கலிவெண்பாவாம் என்றும், [வெண்கலிப்பா பிறதளையும் விரவி வரும்; கலிவெண்பா வெண்தளையே தட்டுவரும்] ஒரு தரவே வந்தும் தரவு இரண்டு இணைந்து வந்தும் சில தாழிசை வந்தும் பல தாழிசை வந்தும் முறையானே நிகழ்வனவும், தரவு தாழிசை அராகம் அம்போதரங்கம் தனிச்சொல் சுரிதகம் என்னும் ஆறு உறுப்பும் தம்முள் மயங்கியும் வெண்பாவினோடும் ஆசிரியத்தினோடும் மயங்கியும் வந்தனவும், முறையே, | | |
|
|