செய்யுளியல் - நூற்பா எண் 29

159

 
தரவு கொச்சகம், தரவுஇணைக் கொச்சகம், சிஃறாழிசைக் கொச்சகம், பஃறாழிசைக்
கொச்சகம், மயங்கிசைக் கொச்சகம் என்னும் பெயர்களான் அமைதி பெற்ற கொச்சகக்
கலிப்பாவாம் என்றும் கூறுவர் அறிந்தோர் என்றவாறு.

     `பாங்கமை குறளடி' என்ற மிகையானே அசையடி தான் (அம்போதரங்கம்)
அளவடி ஈரடியான் இரண்டும் ஓரடியான் நான்கும் முச்சீரான் எட்டும் இருசீரான்
பதினாறுமாய் வருவது சிறப்புடைத்து எனவும், இவை நான்கும் எட்டுமாய்ச் சுருங்கி
வரவும் பெறும் எனவும், அங்ஙனம் வருதல் சிறப்பின்று எனவும் வேற்றுத்தளை தட்டு
வேற்றோசை தழுவி வருவது வெண்கலிப்பா எனவே தன் தளைதட்டுத் தன்னோசை
தழுவி வருவது கலிவெண்பா என்பது தானே போதரும் எனவும், மரபு என்ற
மிகையானே தனிச்சொல்லும் சுரிதகமும் ஒருசார் கொச்சகத்து இடைஇடை வரப்பெறும்
எனவும் கொள்க.

     அசையடி எனினும் அம்போதரங்கம் எனினும் ஒக்கும். வெண்தளை தட்டு
வெள்ளோசை தழுவிவரும் கலிவெண்பாப் பன்னீரடியின் மிக்கே வரும் எனக் கொள்க.

வெள்ளைச் சுரிதகத்தால் இற்ற நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச்
செய்யுள்:

  `முத்தொடு மணிதயங்கு முக்குடைக்கீழ் முனைவனே!
எத்திசையும் பல்லுயிர்கள் இன்புற இனிதிருந்து,
பத்துறு திசைஅனைத்தும் பகைபசி பிணிநீங்க,
உத்தமர்கள் தொழுதேத்த, ஒளிர்வரைபோல் செலவினாய்!'
 
 

[இது தரவு]