160

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `எள்ளனைத்தும் இடரின்றி எழில்மாண்ட பொன்னெயில்
உள்ளிருந்த உன்னையே உறுதுணையென் றடைந்தோரை,
வெள்ளில்சேர் வியன்காட்டுள் உறைகென்றல் விழுமிதோ?ழு

`குணங்களின் வரம்பிகந்து கூடிய பன்னிரண்டு
கணங்களும்வந் தடியேத்தக் காதலித்துன் னடைந்தோரை,
பிணம்பிறங்கு பெருங்காட்டு ளுறைகென்றல் பெருமையோ?ழு

`விடத்தகைய வினைநீக்கி வெள்வளைக்கைச் செந்துவர்வாய்
மடத்தகைய மயிலனையார் வணங்கநின் னடைந்தோரை,
தடத்தகைய காடுறைக என்பதுநின் தகுதியோ ?ழு
 
 

 [இவை மூன்றும் தாழிசை]

 
           என ஆங்கு  
 

[தனிச்சொல்]

 
  `எனைத்துணையை ஆயினும் ஆக,மற்று உன்கண்
தினைத்துணையும் தீயவை இன்மையின், சேர்தும்;
வினைத்தொகையை வீட்டுக என்றுழு
 
 

 [இது சுரிதகம்]
- யா.கா.31 மே.

 
என வரும்,

 ஆசிரியச்சுரிதகத்தால் இற்றநேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச்
செய்யுள்:

  `வாள்நெடுங்கண் பனிகூர, வண்ணம்வே றாய்த்திரிந்து,
தோள்நெடுந் தகைதுறந்து, துன்பங்கூர் பசப்பினவாய்ப்
பூண்ஒடுங்கு முலைகண்டும், பொருட்பிரிதல் வலிப்பவோ?ழு
 
 

[இது தரவு]

 
  `சூருடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால்,
பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ? பெரியவரே!

`சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவரால்
நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ? நலமிலரே!ழு

`சிலம்படைந்த வெங்கானம் சீரிலவே என்பவால்:
புலம்படைந்து நலந்தொலையப் போவாரே? பொருளிலரே!ழு
 
 

 [இவை மூன்றும் தாழிசை]