செய்யுளியல் - நூற்பா எண் 29

161

 
   என ஆங்கு  
 

[தனிச்சொல்]

 
  `அருள்எனும் இலராய்ப் பொருள்வயின் பிரிவோர்,
பன்னெடுங் காலமும் வாழியர் !
பொன்னெடுந் தேரோடு தானையின் பொலிந்தே,'
 
 

[இது சுரிதகம்]
 - யா. கா. 31 மே.

 
என வரும்.
     எட்டும் பதினாறும் குறையாது வந்த அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச்
செய்யுள் வந்துழிக்காண்க.

          - [தொ. பொ. 458 பே. யா. வி. 83 உரை நோக்குக]

     எட்டும் பதினாறும் குறைந்து நான்கும் எட்டுமாய் வந்த அம்போதரங்க
ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச் செய்யுள் :
  `கெடலறு மாமுனிவர் கிளர்ந்துடன் தொழுதேத்த,
கடல்கெழு கனைசுடரின் கலந்தொளிரும் வாலுளைய
அழலவிர் சுழல்செங்கண் அரிமாவாய், மலைந்தானை,
தாரொடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க,
ஆர்புனல் இழிகுருதி அகலிடம் உடன்நினைப்ப,
கூர்உகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்!'
 
 

[இது தரவு]

 
  `முரசதிர் வியன்மதுரை முழுவதூஉம் தலைபனிப்பப்
புரைதொடித் திரள்திண்தோள் போர்மலைந்த மறமல்லர்
அடியொடு முடிஇறுப்புண் டயர்ந்தவர் நிலம்சேரப்
பொடிஎழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ?'

`கலிஓலி வியன்உலகம் கலந்துடன் நனிநடுங்க,
வலிஇயல் அவிர்ஆழி மாறெதிர்ந்த மருட்சோர்வும்
மாணாதார் உடம்போடு மறம்பிதிர எதிர்கலக்கிச்
சேணுயர் இருவிசும்பில் சேர்த்ததுநின் சினமாமோ?'

'படுமணி யினநிரைகள் பரந்துடன் இரிந்தோடக்
கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு