162

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  வெரிநொடு மருப்பொசிய வீழ்ந்துநிறம் வேறாக
எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் இகலாமோ?'
 
 

[இவை மூன்றும் தாழிசை]

 
  `இலங்கொளி மரகதம் எழில்மிகு வியன்கடல்'
வலம்புரித் தடக்கையின் மாஅல்! நின்நிறம்;'

`விரிஇணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்,
பொருகளிறு அட்டோய்! புரையும் நின்உடை;'
 
 

[பேரெண்]

 
இவை நாற்சீர் அடி இரண்டு அம்போதரங்கம்.
  `கண்கவர் கதிர்முடி கனலும் சென்னியை;
தண்சுடர் உறுபகை தவிர்த்த ஆழியை;
ஒலிஇயல் உவணம் ஓங்கிய கொடியினை;
வலிமிகு சகடம் மாற்றிய அடியினை;
 
 

[அளவெண்]

 
இவை நாற்சீர் ஓர்அடி நான்கு அம்போதரங்கம்.
  `போர்அவுணர்க் கடந்தோய் நீஇ;
புணர்மருதம் பிளந்தோய் நீஇ;
நீரகலம் அளந்தோய் நீஇ;
நிழல்திகழைம் படையோய் நீஇ;'
 
 

[இடை எண்]

 
இவை முச்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்.
  `ஊழி நீஇ; உலகு நீஇ;
உறவு நீஇ; அருவு நீஇ;
ஆழி நீஇ; அருளும் நீஇ;
அறமும் நீஇ; மறமும் நீஇ; `
 
 

 [சிற்றெண்]

 
இவை இருசீர் ஓர்அடி எட்டு அம்போதரங்கம்
  என ஆங்கு  
 

[தனிச்சொல்]