| `அடுதிறல் ஒருவ !நிற் பரவுதும்; எங்கோன் தொடுகழல் கொடும்பூண் பகட்டெழில் மார்பின் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயல்உறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன் தொன்று முதிர்கடல் உலகம் ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே,' | | | - யா,கா, 31 மே. [இது சுரிதகம்] | | |
என வரும், |
ஆறு உறுப்பும் குறையாது வந்த வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச் செய்யுள் |
| `விளங்குமணிப் பசும்பொன்னின் விரித்தமைத்துக் கதிர்கான்று துளங்குமணிக் கனைகழற்கால் துறுமலர் நறும்பைந்தார்ப் பரூஉத்தடக்கை மதயானைப் பணைஎருத்தின் மிசைத்தோன்றும் குரூஉக்கொண்ட மணிப்பூணோய்! குறைஇரந்த முன்னாள்கண் மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கும் அல்லார்க்கும் தாயாகித் தலைஅளிக்கும் தண்துறை ஊர ! கேள் ! | | | [இது தரவு] | | |
| காட்சியால் கலப்பெய்தி எத்திறத்தும் கதிர்ப்பாகி மாட்சியால் திரியாத மரபொத்தாய்; கரவினால் பிணிநலம் பெரிதெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய அணிநலம் தனியேவந்து அருளுவதும் அருளாமோ' `அன்பினால் அமிழ்தளைஇ அறிவினால் பிறிதின்றிப் பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப் பெருவரைத்தோள் அருளுதற் கிருளிடைத் தமியையாய்க் கருவரைத்தோள் கதிர்ப்பிக்கும் காதலும் காதலோ?' `பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும் தேங்காத கரவினையும் தெரியாத இருளிடைக்கண் குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் தமியையாய்த் தடமலர்த்தாள் அருளும்நின் தகுதியும் தகுதியோ ?' | | | [இவை மூன்றும் தாழிசை] | | |