செய்யுளியல் - நூற்பா எண் 29

165

 
  கழிவெய்தும் படித்தொருபால்;
பரிவுறூஉம் தகைத்தொருபால்
படர்வுறூஉம் பசப்பொருபால்;
இரவுறூஉம் துயரொருபால்;
இளிவந்த எழிற்றொருபால்;
மெலிவுறூஉந் தகைத்தொருபால்;
விளர்ப்புவந் தடைந்தொருபால்;
பொலிவுசென் றகன்றொருபால்;
பொறைவந்து கூர்ந்தொருபால்;
காதலிற் கதிர்ப்பொருபால்;
கட்படாத் துயரொருபால்;
ஏதில்சென் றணைந்தொருபால்;
இயல்நாணின் செறிவொருபால்;
 
     
இவை இருசீர் ஓரடிப் பதினாறு அம்போதரங்கம்.
            என ஆங்கு  
 

[தனிச்சொல்]

 
  `இன்னதிவ் வழக்கம், இத்திறம் இவள்நலம்,
என்னவும், முன்னாள் துன்னா யாகிக்
கலந்த வண்மையை ஆயினும், நலந்தகக்
கிளையொடு கெழீஇத் தளைஅவிழ் கோதையைக்
கற்பொடு காணிய யாமே,
பொற்பொடு பொலிக!நும் புணர்ச்சி தானே'
 
 

 - யா. கா. 32 மே.
[இது சுரிதகம்]

 
என வரும்.

வேற்றுத்தளை தட்டிவந்த பெண்கலிப்பாவிற்குச் செய்யுள் :

  `ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தண்
வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு, வருந்தியஎன்
தார்வரை மகன்மார்பன் தனிமையை அறியுங்கொல்?
சீர்மலி கொடியிடை சிறந்து'
 
 

 - யா. கா. 32 மே.

 
எனவும்,