166

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

கலித்தளை தட்டுவந்த வெண்கலிப்பாவிற்குச் செய்யுள் :

  `வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்க,
கோளார்ந்த பூணாகம் குழைபுரள கோட்டெருத்தின்
மாலைதாழ் கூந்தலார் வரன்முறையான் வந்தேத்த,
சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தம் சொல்முறையான்,
மனையறமும் துறவறமும் மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும்
வினையறுக்கும் வகைதெரிந்து, வீடொடுகட் டிவையுரைத்த,
தொன்மைசால் மிகுகுணத்தெம் துறவரசைத் தொழுதேத்த
நன்மைசால் வீடெய்து மாறு'
 
 

 - யா. கா. 32 மே.

 
எனவும்,

வெண்தளை தட்டுவந்த கலிவெண்பாவிற்குச் செய்யுள் :

  `சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில்நாம் ஆடும்
மணற்சிற்றில் காலில் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர்நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை,
அடர்பொன் சிரகத்தால் வாக்கிச், சுடரிழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா என்றாள், எனயானும்
தன்னை அறியாது சென்றேன்,மற் றென்னை,
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
அன்னாய் இவனொருவன் செய்ததுகாண்! என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னையான்
உண்ணுநீர் விக்கினான் என்றேனா, அன்னையும்,
தன்னைப் புறம்பழித்து நீவ,மற் றென்னைக்
கடைக்கண்ணால் கொல்வான்போல் நோக்கி, நகைக்கூட்டம்
செய்தான்; அக் கள்வன் மகன்.'
 
 

- யா. கா. 32 மே; கலி. 51

 
எனவம் வரும்.

தனிச்சொல் இன்றிக் கலி அடியானே இற்ற தரவு கொச்சகக் கலிப்பாவிற்கு செய்யுள் :