செய்யுளியல் - நூற்பா எண் 29

167

 
  `செல்வப்போர்.....ஒளித்ததே' எனவும  
 

- பக்கம் 154

 
   தனிச்சொல் பெற்றுச் சுரிதகத்தால் இற்ற தரவு கொச்சகக்கலிப்பாவிற்குச் செய்யுள் :
`குடநிலைத் தண்புறவில்......சென்ற வாறே'
 
 

- பக்கம் 154

 
எனவும் வரும்.

இடையிடைத் தனிச்சொல் பெற்றுச் .சுரிதகத்தால் இற்ற தரவிணைக்
கொச்சகக்கலிப்பாவிற்குச் செய்யுள் :

  `வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய
கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்கும் காவலனாம்
கொடிபடு வரைமாடக் கூடலார் கோமானே!'
 
 

- பக்கம் 154

 
இது தரவு.
          என ஆங்கு  
 

[தனிச்சொல்]

 
  `துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம்
                                  தொலைப்புண்டாங்கு
இணைமலர்த்தார் அருளுமேல், இதுஇதற்கோர் மாறென்று,
துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ?'
 
 

- பக்கம் 154

 
இது தரவு,
           அதனால்.  
 

[தனிச்சொல்]

 
   `செவ்வாய்ப் பேதை இவள்திறத்து
எவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே.'
 
 

 - யா. கா. 33 மே.
 [இது சுரிதகம்]

 
என வரும்.

இடையிடைத் தனிச்சொல் பெற்றுவந்த சிஃறாழிசைக்
கொச்சகக்கலிப்பாவிற்குச் செய்யுள்:

  `பரூஉத்தடக்கை மதயானைப் பணைஎருத்தின் மிசைத்தோன்றிக்
குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க் குடைமன்னர் புடைசூழப்
படைப்பரிமான் தேரினொடும் பரந்துலவு மறுகினிடைக்
கொடித்தானை இடைப்பொலிந்தான் கூடலார் கோமானே.'
 
     
என வரும்.

வேற்றுத்தளை தட்டிவந்த பெண்கலிப்பாவிற்குச் செய்யுள் :

  `ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தண்
வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு, வருந்தியஎன்
தார்வரை மகன்மார்பன் தனிமையை அறியுங்கொல்?
சீர்மலி கொடியிடை சிறந்து'
 
 

 - யா. கா. 32 மே.

 
இது தரவு.