செய்யுளியல் - நூற்பா எண் 29

169

 
  கண்மதிஓர்ப் பிவையின்றிக் காரிகையை நிறைகவர்ந்து,
பெண்மதியின் மகிழ்ந்தநின் பேரருளும் பிறிதாமோ?'
 
 

[இது தரவு]

 
  `இளநலம் இவள்வாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல்
தளநல முகைவெண்பல் தாழ்குழல் தளர்வாளோ?'

`தகைநலம் இவள்வாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல்
வகைநலம் இவள்வாடி வருந்திஇல் இருப்பாளோ ?'

அணிநலம் இவள்வாட அரும்பொருட்குப் பிரிவாயேல்
மணிநல மகிழ்மேனி மாசோடு மடிவாளோ ?'

`நாம்பிரியேம் இனிஎன்று நறுநுதலைப் பிரிவாயேல்
ஓம்பிரியோம் எனஉரைத்த உயர்மொழியும் பழுதாமோ'

`குன்றளித்த திரள்தோளாய்! கொய்புனத்தில் கூடியநாள்
அன்றளித்த அருள்மொழியால் அருளியதும் பழுதாமோ?'

`சில்பகலும் ஊடியக்கால் சிலம்பொலிச்சீ றடிபரவுப்
பல்பகலும் தலையளித்த பணிமொழியும் பழுதாமோ?'
 
 

[இவை ஆறும் தாழிசை]

 
 

என ஆங்கு

 
 

 [தனிச்சொல்]

 
  `அரும்பெறல் அமிழ்தினும் தரும்பொருள் அதனினும்
பெரும்பெறல் அரிதிவள் வெறுக்கையும் அற்றே;
                      அதனால்,
விழுமியது அறிமதி வாழி
கெழுமிய காதலின் தரும்பொருள் சிறிதே.'
 
 

- யா. கா. 33 மே.
[இது சுரிதகம்]

 

கலிக்கு ஓதப்பட்ட ஆறு உறுப்பும் மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும்
வந்து மயங்கிய மயங்கிசைக் கொச்சகக்கலிப்பாவிற்குச் செய்யுள் :

  `அணிகிளர் மணிமுடி மாயவனும் தம்முனும்போல்
தணிகிளர் நெடுங்கடலும் கானலும் தோன்றுமால்;
நுரைநிவந் தவையன்ன நொய்ப்பறைய சிறைஅன்னம்
இரைநயந் திறைகூரும் ஏமஞ்சால் துறைவு ! கேள்.'