170

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `மலையென மழையென மஞ்செனத் திரைபொங்கிக்
கனலெனக் காற்றெனக் கடிதுவந் திசைப்பினும்,
விழுமியோர் வெகுளிபோல், வேலாழி இறக்கலாது
எழுமுந்நீர் பரந்தொழுகும் ஏமஞ்சால் துறைவ ! கேள்.ழு
 
 

 [இவை இரண்டும் தரவு]

 
  `கொடிபுரையும் நுழைநுசுப்பின் குழைக்கமர்ந்த திருமுகத்தோள்
தொடிநெகிழ்ந்த தோள்கண்டும் துறவலனே என்றியால்;ழு

`கண்கவரும் மணிப்பைம்பூண் கயில்கவைஇய திருமுகத்தோள்
தெண்பனிநீர் உகக்கண்டும் தெரியலனே என்றியால்;ழு

`நீர்பூத்த நிரைஇதழ்க்கண் நின்றொசிந்த புருவத்தோள்
பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே என்றியால்;ழு

`கனைவரல்யாற் றிகுகரைபோல் கைந்நில்லா துள்நெகிழ்ந்து
நினையுமென் நிலைகண்டும் நீங்கலனே என்றியால்;ழு

`வீழ்சுடரின் நெய்யேபோல் விழுமநோய் பொறுக்கல்லாது
ஆழும்என் நிலைகண்டும் அகல்கிலனே என்றியால்;ழு

`கலங்கவிழ்ந்த நாய்கன்போல் களைதுணை பிறிதின்றிப்
புலம்பும்என் நிலைகண்டும் போகலனே என்றியால்;
 
 

[இவை ஆறும் தாழிசை]

 
                    அதனால்  
 

[தனிச்சொல்]

 
  `அடும்பமல் இறும்பின் நெடும்பனை மிசைதொறும்
கொடும்புற மடலிடை ஒடுங்கின குருகு;ழு

`செறிதரு செருவிடை எறிதொழில் இளையவர்
நெறிகரு புரவியின் மறிதரும் திமில்;ழு

`அரசுடை நிரைஅடை விரைசெறி முரைசென
நுவைரு திரையொடு கரைபொருங் கடல்;ழு

`அலங்கொளி அவிர்சுடர் இலங்கெழில் மலர்தொறும்
கலந்தெறி காலொடு புலம்பின பொழில்;ழு
 
 

 [இவை நான்கும் அராகம்]

 
  `விடாஅது கழலும்என் வெள்வளையும் தவிர்ப்பாய்மன் ;
கெடாஅது பெருகும்என் கேண்மையும் நிறுப்பாயோ ?ழு
`ஒல்லாது கழலும்என் ஒளிவளையும் செறிப்பாய்மன் ;
நில்லாது பெருகும்என் நெஞ்சமும் நிறுப்பாயோ ?ழு