| `தாங்காது கழலும்எண் தகைவளையும் தவிர்ப்பாய்மன்; நீங்காது பெருகும்என் நெஞ்சமும் நிறுப்பாயோ?' `மறவாத அன்பினேன் மனன்நிற்கு மாறுரையாய்; துறவாத தமருடையேன் துயர்தீரு மாறுரையாய்;' `காதலார் மார்பன்றிக் காமக்கு மருந்துரையாய்; ஏதிலார் தலைசாய யான்உய்யு மாறுரையாய்;' `இணைபிரிந்தார் மார்பன்றி இன்பக்கு மருந்துரையாய்; துணைபிரிந்த தமருடையேன் துயர்தீரு மாறுரையாய்;' | | | [இவை ஆறும் தாழிசை] | | |
|
| பகைபோன்றது துறை; பரிவாயின குறி; நகைஇழந்தது முகம்; நனிநாணிற்று உளம்; தகைஇழந்தன தோள்; தலைசிறந்தது துயர்; புகைபரந்தது மெய்; பொடியாயிற்றென் உயிர்; | | | | | |
இவை இருசீர் ஓர்அடி எட்டு அம்போதரங்கம். |
|
| `இனையது நிலையால், அனையது பொழுதால், நினையல், வாழி, தோழி, துனைவரல் பனியொடு கழிக உண்கண்; என்னொடு கழிக இத் துன்னிய நோயே.' | | | [இது சுரிதகம்] | | |
என வரும். சுரிதகம் இடைஇடை வந்த கொச்சகச் செய்யுளும், வெண்பாவினோடும் ஆசிரியத்தினோடும் மயங்கி வந்த மயங்கிசைக் கொச்சகச் செய்யுளும் வந்துழிக் காண்க. (கலித்தொகை 39) |
| (29) |