172

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

விளக்கம்

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச் செய்யுள் :

  `கொன்செய்த கலைஅங்குல் கொலைசெய்த மதர்வேற்கண்
மின்செய்த சிறுமருங்குல் பெருந்தேவி விழிகுளிர்ப்பப்
பொன்செய்த மணிமன்றில் நடம்செய்த புகழோய்!கேள்.'
 
 

[இது மூவடித் தரவு]

 
  `முருகுயிர்க்கும் நறுந்தெரியல் மொய்குழலின் மையுண்கண்
பொருகயற்குன் திருமேனி புதுவெள்ளப் புணரியே.'

`தேன்மறிக்கும் வெறித்தொங்கல் அறற்கூந்தல் திருந்திழைகண்
மான்மறிக்குள் திருமேனி மலர்முல்லைப் புறவமே,'

`பிறையளிக்கும் சிறுநுதலப் பெண்ணமுதின் பேரமர்க்கண்
சிறைஅளிக்குன் திருமேனி தேனளிக்கும் பொதும்பரே.'
 
 

 [இவை மூன்றும் தாழசை]

 
 

அதனால்

 
 

[தனிச்சொல்]

 
  `மதுவிரி கோதை மடவரற் கம்ம
புதுவிருந் துண்ண உண்ண
அதிசயம் விளைக்கும்நின் அற்புதக் கூத்தே.'
 
 

[இது மூவடி நேரிசை ஆசிரியச் சுரிதகம்]
 - சி. செ. கோ. 51

 

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச் செய்யுள் :

  `பேதைமீர் ! பேதைமீர் !
பூமன்னு திசைமுகனும் புயல்வண்ணப் பண்ணவனும்
காமன்னு புரந்தரனும் கடவுளரும் புடைநெருங்க
இருகோட்டுக் கிடைந்த இடுகிடையவர்பல் லாண்டிசைப்ப
ஒருகோட்டு மழகளிறும் இளங்கோவும் உடன்போத
அம்பொன்மணி மதிற்றில்லை நடராசன் அணிமறுகில்
செம்பொன்மணிப் பொலந்திண்டேர்த் திருவுலாப் போதுங்கால்'
 
 

[இஃது ஆறடித் தரவு]