| `பாரித்த பேரண்டம் சிறுபண்டி கொளப்பெய்து வாரித்தண் புனல்துஞ்சும் மாலுக்கு மால்செய்வீர்! வேரித்தண் குழலார்கை வளைகொள்ள விழைந்தேயோ? பூரித்து வீங்குவநும் புயமென்பார் சிலமாதர்.' `சொன்மாலை தொடுத்தணிந்த தொண்டர்க்குத் துணைவராய் நன்மாலைக் குழலியர்பால் நள்ளிருளில் செலவல்லீர்! பன்மாதர் உயிர்கொள்ளல் பழியன்றே? பகைகொள்ளும் வில்மாரன் உயிர்கொண்ட விழிக்கென்பார் சிலமாதர்.' `அங்கமலன் முடைத்தலையே பலிக்கலனா ஐயமிடும் மங்கையர்கள் நலங்கவர்வான் பலிக்குழலும் மாதவத்தீர்! தங்கலர்தங் கியமும்மைப் புரமன்றே, தலையன்பின் நங்கையர்தம் புரமுமது நகைக்கென்பார் சிலமாதர்.' | | | [இவை மூன்றும் நான்கடித்தாழிசை] | | |
| `அருங்கலை கவர்ந்துநீர் அளிக்கப் பெற்றநும் இருங்கலை இனிதெமக் கென்பர் ஓர்சிலர்.' `நன்னிறம் கவர்ந்துநீர் நல்கப் பெற்றநும் பொன்னிறம் இனிதெனப் புகல்வர் ஓர்சிலர்.' | | | [பேரெண்] | | |
இவை இரண்டும் நாற்சீர் ஈரடி அம்போதரங்கம் |
| `தேரினை நோக்கியே திரிவர் சிற்சிலர்; ஏரினை நோக்கியே எழுவர் சிற்சிலர்; தாரினை நோக்கியே தளர்வர் சிற்சிலர்; மாரினை நோக்கியே மருள்வர் சிற்சிலர்.' | | | [அளவெண்] | | |
இவை நான்கும் நாற்சீர் ஓர்அடி அம்போதரங்கம் |
| `நலனழிந்து நிற்பார் சிலர்; நாண்துறந்து நிற்பார் சிலர்; கலனழிந்து நிற்பார் சிலர்; கண்கலுழ்ந்து நிற்பார் சிலர்;' | | | [இடைஎண்] | | |
இவை முச்சீர் ஓரடி அம்போதரங்கள் 4. |