செய்யுளியல் - நூற்பா எண் 29 | 175 | | | `கடநாக மெட்டும்,விடம் கால்நாகம் ஓரெட்டும், தடநாகம் அவைஎட்டும், தரித்துளபூந் துகிலொன்றும், உடனாக அடல்புரியும் கொடுவரியின் உடுப்பொன்றும், அடல்நாக அரவல்குற் கணிகலையா அசைத்தனையே.' `வருநீலப் புயல்மலர மலர்இதழிக் கண்ணியையும், அருநீல முயற்களங்கம் அகன்றமதிக் கண்ணியையும், கருநீலக் கண்ணிஉமை செங்கைவரு கங்கையெனும் திருநீலக் கண்ணியையும், செஞ்சடைமேல் செறித்தனையே.' | | | [தாழிசை 3] | | | | `கறைவிட முகவெரி கனல்விழி யொடுமிளிர் பிறையெயி றொடுமடல் பெறுபக டொடுமடல் எறுழ்வலி யொடுமுரு மிடியென வருமொரு மறலிய துயிர்கொள மலர்தரு கழலினை.' `உலகமொ டுயிர்களு முலைதர வலம்வரும் மலர்மகள் கொழுநனும் மகபதி முதலிய புலவரும் அடிகளொர் புகலென முறையிட அலைகடல் விடமுனம் அமுதுசெய் தருளினை.' `விசையிலெம் இறைவியும் வெருவர இரசத அசலம தசைதர அடல்புரி தசமுக நிசிசரன் மணிமுடி நெறுநெறு நெறுவென வசையில்பொன் மலரடி மணிவிரல் நிறுவினை.' `இலவிதழ் மதிநுதல் இரதியொ டிரதம துலைவற நடவிடு மொருவனும் வெருவர அலைகட லொடுமுர சதிர்தர எதிர்தரு சிலைமத னனையடல் செயுநுதல் விழியினை.' | | | [அராகம் 4] | | | | `அருவமும் உருவமும் ஆகிநின்று மவ் வருவமும் உருவமும் அகன்று நின்றனை;' `சொல்லொடு பொருளுமாய்த் தோன்றி நின்றுமச் சொல்லையும் பொருளையும் துறந்து நின்றனை;' | | | [ஈரடி அம்போதரங்கம் 2] | | | |
|
|
|