|
| `அந்நலம் விழைந்தவர்க்கு அறமும் ஆயினை; பொன்னலம் விழைந்தவர் பொருளும் ஆயினை; இன்னலம் விழைந்தவர்க் கின்பும் ஆயினை; மெய்ந்நலம் விழைந்தவர் வீடும் ஆயினை.ழு | | | - [ஓரடி அம்போதரங்கம் 4] | | |
| `முத்தொழிலின் வினைமுதல் நீ; மூவர்க்கும் முழுமுதல் நீ; எத்தொழிலும் இறந்தோய் நீ; இறவாத தொழிலினை நீ; இருவிசும்பின் மேயோய் நீ; எழில்மலரின் மிசையோய் நீ; அரவணையில் துயின்றோய் நீ; ஆலின் கீழ் அமர்ந்தோய் நீ; | | | - [முச்சீரடி அம்போதரங்கம் 8] | | |
| `பெரியை நீ; சிறியை நீ; பெண்ணும் நீ; ஆணும் நீ; அரியை நீ; எளியை நீ; அறமும் நீ; மறமும் நீ; விண்ணும் நீ; மண்ணும் நீ; வித்தும் நீ; விளைவும் நீ; பண்ணும் நீ; பயனும் நீ; பகையும் நீ; உறவும் நீ; | | | - [இருசீரடி அம்போதரங்கம் 16] | | |
|
| `கற்பனை கழன்றநின் பொற்கழல் இறைஞ்சுதும்; வெண்மதிக் கடவுள் மீமிசைத் தவழ்தரத் தண்முகில் குழாங்கள் தாழ்வுறப் படிதலின், செங்கால் அன்னமும் வெண்மருப்பு ஏனமும் கீழ்மேல் துருவ, ஆரழல் பிழம்பாய் நின்றநின் தன்மையை உணர்த்தும், பொன்திகழ் புலியூர் மன்றுகிழ வோனே.ழு | | | [சுரிதகம்] - சி. செ. கோ. 59 | | |