செய்யுளியல் - நூற்பா எண் 29 | 177 | | வேற்றுத்தளை விரவிவந்த வெண்கலிப்பாவிற்குச் செய்யுள். | | `அற்புத மணிமன்றில் அடிகள் !நின் அடிஉன்னார் மைக்கடல் விடமென்னும், வடவைத்தீ எழஅஞ்சி, நொ-என அடிவீழ்ந்தார்க் குதவிலர், நாணார்கொல், கைத்தல அபயத்தர், வரதத்தர், கைசெய்யாச் சித்திரம் அன்னர் சிலர்.' | | | - சி. செ. கோ. 61 | | | கலித்தளை தட்டுத் துள்ளல் ஓசைத்தாய் வந்த வெண்கலிப்பாவிற்குச் செய்யுள் : | | `சேல்செய்த மதர்வேற்கண் சிலைசெய்த சுடிகைநுதல் மால்செய்த குழற்கோதை மகிழ்செய்ய நடஞ்செய்யும் தருணஇளம் பிறைக்கண்ணித் தாழ்சடைஎம் பெருமானின் கருணைபொழி திருநோக்கின் கனியாத கல்நெஞ்சம், வாமஞ்சால் மணிக்கொங்கைக்கு ஒசிந்தொல்கு மருங்குவலர் காமஞ்சால் கடைநோக்கின் கரைந்துருகா நிற்குமால்; அவ்வண்ணம் மாறிநிற்பது அகமென்றால், அகம்அகம்விட்டு எவ்வண்ணம் மாறிநிற்பது இன்று?' | | | - 60 | | | வெண்டளை தட்டு வந்த கலிவெண்பா : | | `தொடலைக் குறுந்தொடித் தோகாய் ! நம் பாவை படலைச் சிறுமுச்சி உச்சிப் பசுங்கிள்ளை பேதைக் குழாத்தொடு நென்னல் பொழுதின்கண் வீதிக்கே நின்று விளையாட்டு அயருங்கால், அஞ்சனக் கண்ணாளும் தாமும், அணிதில்லைச் செஞ்சடைக் கூத்தனார் வெள்விடைமேல் சேறலும், உள்நெக் குருக எதிர்ப்பட் டுடையானைக் கண்ணில் பிணித்து, மனத்தில் கொடுபுக்கு, இறைவளை சிந்த அணிதுகில் சோரப் பிறர்அறியா வண்ணம் புணர்ந்தும் புணராள்போல் மையுண்கண் ணீர்சோரச் சோர்தலும் வார்குழலார் கைகோத் தெடுத்துக் கடிமனை கொண்டுய்ப்ப, | | | |
|
|
|