178

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  பைந்தண் குளிரி படுத்துக் கிடத்தலும்
செந்தீப் பிழம்பில் கிடத்திச் செருச்செய்வது
அந்தோ கொடிதுகொடிது என்செய்தீர்? அன்னைமீர்;
பொன்னஞ் சிலையே சிலையாப் புரமெய்தான்
தண்ணென் கடுக்கை கொணர்ந்தாரோ? தம்மினென,
மின்தந்த நுண்ணிடையாய்! எங்கோன் விரைத்தொங்கல்
தன்தந்தை தாளெறிந்தாற் கன்றித்தா ரானென்மேற்கு
அன்றே பகைநோக் களித்தாள்மற் றம்ம;
சிறியாள் பெரும்பித் தறிந்திருந்தும், செவ்வி
அறியா துரைத்தேன் அது.'
 
 

- சி. செ. கோ. 62

 
[இது செப்பல் ஓசைத்தாய் 22 அடிகளை உடையதாய் ஒரு பொருள்நுதலி வந்த
கலிவெண்பா.]

கலித்தளைதட்டுத் தனிச்சொல்லும் சுரிதகமும் பெறாது வந்த தரவு
கொச்சகத்திற்குச் செய்யுள் :

  `அடிகொண்ட குனிப்பன்றே; அரிபிரமர் முதலானோர்
முடிகொண்ட தலைவணக்கின் குனிப்பெல்லாம் முறைமுறைபோய்,
கடிகொண்ட பொழிற்றில்லை நடராசன் கழற்காலில்
குடிகொண்ட படிபோலும்; இடத்தாளில் குஞ்சிதமே.'
 
 

- 63

 

தனிச் சொல்லும் சுரிதகமும் பெற்ற தரவு கொச்சகத்திற்குச் செய்யுள் :

  `மல்லாண்ட திரள்திண்தோள் துழாய்முதலும், மணிநாவின்
சொல்லாண்ட மறைமுதலும், பலராங்குத் தொலைவெய்தப்
பல்லாண்டு செலச்செல்லா இளையோரும் பனிப்பெய்த,
அல்லாண்ட நள்ளிருளில் அழலாடும் தொழிலினையே,'
 
 

[தரவு]

 
 

அதனால்

 
 

 [தனிச்சொல்]

 
  `பல்பே ரூழி செல்லினும் அடிகட்கு
ஒல்லையும் செல்லா தாகும், ஆகலின்,