செய்யுளியல் - நூற்பா எண் 29

179

 
  அளவில் காலம் அலக்கணுற் றுழலுமென்
தளர்வு நோக்காய் போலும்; நோக்கின்
கருணைசெய் தருளா யல்லை;
அருள்நலம் பழுத்த ஆடல்வல் லோயோ.'
 
 

- சி. செ. கோ. 64

 

தரவிணைக் கொச்சகத்திற்குச் செய்யுள் :

  `குழைதூங்கு கழைமென்தோள் கோமாரி கொலைக்கண்கள்
இழைதூங்கு முலைக்கண்வைத் தேஎய்தா நாண்எய்த
உழைதூங்கு குயின்ஏங்க உருமுத்தீ உகநக்கு
மழைதூங்கு பொழில் தில்லை மணிமண்ணுள் நடஞ்செய்வோய்!'

`மீனேற்றின் துவசத்தான் தனிதுஞ்ச விழித்தோய், நின்
ஆனேற்றின் துவசமோ, அடலேற்றின் ஊர்தியோ,
கானேற்ற பைங்கூழின் கவளமாக் கணத்தின்கண்
வானேற்ற பகிரண்டம் வாய்மடுக்க வல்லதே.'
 
 

- [இரு தரவு]

 
 

எனவாங்கு,

 
 

[தனிச்சொல்]

 
  `பைந்துழாய் மவுலிப் பண்ணவன் உவப்ப
அந்தணர் பழிச்சவும் அறத்தின் புங்கவன்
முனியான் முனிவன் போலும்;
அனைய தன்றே, ஆன்றோர் கடனே.'
 
 

[சுரிதகம்]
 - சி. செ. கோ. 65

 

தரவு ஒன்றும் தாழிசை மூன்றும் இடைஇடைத் தனிச் சொல்லும் பெற்றுச்
சுரிதகத்தால் இற்ற சிஃறாழிசைத் கொச்சகத்திற்குச் செய்யுள் :

  `மறைதங்கு திருமன்றில் நடங்கண்டு மகிழ்பூத்துக்
கறைதங்கு படஅரவம் இமையாது கண்விழிப்பக்
குறைதங்கு கலைநிறையின் கோள்இழைக்குங் கொல்என்று
நிறைதங்கு தலைஉவவு நிரம்பாது நிரப்பெய்தும்
பிறைதங்கு சடைக்கற்றைப் பெரும்பற்றப் புலியூரோய்!'
 
 

[தரவு]