செய்யுளியல் - நூற்பா எண் 29 | 181 | | | `கடிக்கமலப் பார்வைவைத்தும் கண்ணனார் காணாநின் அடிக்கமலம்; முடிக்கமலம் அறியாதேம் அறிதுமே.' `முத்தொழிலின் முதற்றொழிலோன் முடியிழந்தான் தனை இகழ்ந்த அத்தொழிலிற் கெனில், தமியேம் அறிதொழிற்கும் வல்லமே.' `இருக்கோல மிட்டுமின்னும் உணராதால், எந்தை! நின் திருக்கோலம்; யாமுணர்ந்து சிந்திக்கக் கடவமே.' `நான்மறைக்கும் துறைகண்டார் தோளிழந்தார் நாவிழந்திங்கு, ஊன்மறைக்க மறைப்புண்டே, உய்த்துணர்வு பெரியமே.' `தாமடிகள் மறந்துமறித் தலைகொண்டார் கலைவல்ல மாமடிகள், யாமடிகள் மறவாமை உடையமே.' `பலகலையும் குலமறையும் பயின்றுணர்ந்தும் பயன்கொள்ளாது உலகலையும் சிலகலையும் உணராதேம் உணர்துமே.' | | | [இவை தாழிசை] | | | | | `அம்மநின் தன்மை எம்மனோர் உணர்தற்கு அரிதே, எளிதே யாதல், பெரிதே கருணை,சிறியேம் மாட்டே.' | | | [சுரிதகம்] - 67 | | | மயங்கிசைக் கொச்சகத்திற்குச் செய்யுள் : | | `சூல்முகத்த சுரிமுகங்கள் நிரைத்தார்ப்பத் தொடுகடல்வாய் வான்முகத்த மழைக்குலங்கள் மறிபுனல்வாய் மடுத்தென்னக் கான்முகத்த மதுகரத்தின் குலமீண்டிக் கடிமலர்வாய்த் தேன்முகக்கும் பொழில்தில்லைத் திருச்சிற்றம் பலத்துறைவோய்!' `புற்புதமும் தொலைசெய்த நிலைஎய்தாப் புலைஉடம்பின் இற்புதவு திறந்திறவா இன்பவீ டெய்தஒரு நற்புதவு திறந்தன்ன, நறும்பொதுவில் நங்கையுடன் அற்புதவும் ஆனந்த நடம்பயிலும் அறவோய்!கேள்.' | | | [இவை இரண்டும் தரவு] | | | |
|
|
|