செய்யுளியல் - நூற்பா எண் 29

183

 
  `இன்னருளே மன்னுயிர்கட் கெத்தொழிலும், ஈன்றெடுத்த
அன்னைமுனி வதுந்தனையர்க் கருள்புரிதற் கேயன்றே!'

`எவ்வுருவும் நின்னுருவும் அவளுருவும் என்றன்றே,
அவ்வுருவும் பெண்ணுருவும் ஆணுருவும் ஆயவே!'

`நின்னலா தவளில்லை, அவளலால் நீஇல்லை,
என்னின் நீயேஅவனும் அவளுமாய் இருத்தியால்!'
 
 

[இவை ஆறும் தாழிசை]

 
 

அதனால்

 
 

 [தனிச்சொல்]

 
  `தந்தைநீ, தாயும்நீ, தமரும்நீ, பிறரும்நீ,
சிந்தைநீ, உணர்வுநீ, சீவன்நீ, யாவும்நீ.
 
 

[இவை எட்டும் இருசீரடி அம்போதரங்கம்]

 
 

எனவாங்கு,

 
 

 [தனிச்சொல்]

 
  `நெஞ்சகம் குழைந்து நெக்குநெக் குருக,நின்
குஞ்சித சரணம் அஞ்சலித் திறைஞ்சுதும்,
மும்மலம் பொதிந்த முழுமலக் குரம்பையில்
செம்மாந் திருப்பது தீர்ந்து,
மெய்ம்மையிற் பொலிந்த வீடுபெறல் பொருட்டே.'
 
 

[சுரிதகம்]

 

ஒத்த நூற்பாக்கள்

  `ஒத்தா ழிசைக்கலி இருவகைத் தாகும்.'  
 

- தொ. பொ. 443

 
  `இடைநிலைப் பாட்டொடு தரவுபோக்கு அடையென
நடைநவின் றொழுகும் ஒன்றென மொழிப.'
 
 

- 444

 
  `அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர்
நடைநவின் றொழுகும் ஆங்கென் கிளவி.'
 
 

- 447

 
  `தரவியல் ஒத்தும் அதனகப் படுமே
புரைதீர் இறுதி நிலைஉரைத் தன்றே.'
 
 

 - 449