செய்யுளியல் - நூற்பா எண் 29

185

 
  `தனிதர நிற்றலின் தனிநிலை குனிதிரை
நீரிச்சுழி போல நின்றுசுரிந் திறுதலின்
சோர்ச்சியில் புலவர் சுரிதகம் என்ப.'

`அம்பு வண்ணகம் இருமூன்று அடியின;
மூன்றடி சிறுமை; ஆறடி பெருமை
தந்துமுன் நிற்றலின் தரவா கும்மே.'
`இரண்டடி சிறுமை பெருமை இரட்டி
தரவடி அதனில் தாழ்ந்திறும் தாழிசை.'

`தனிநிலை சுரிதகம் வரைநிலை இலவே.'

`சிறுமை இரண்டடி பெருமைபொருள் முடிவே
சுரிதகம் என்ப தொன்மொழிப் புலவர்.'
`தரவே தாழிசை தனிநிலை சுரிதகம்
எனநான்கு உறுப்பினது ஒத்தா ழிசைக்கலி.'
 
 

- காக்கை

 
  `தன்னுடை அந்தமும் தாழிசை ஆதியும்
துன்னும் இடத்துத் துணிந்தது போலிசை
தன்னொடு நிற்றல் தரவிற் கியல்பே.'
 
 

- காக்கை

 
  `தத்தமில்ஒத்துத் தரவின் அகப்பட
நிற்பன மூன்றும் நிரந்ததா ழிசையே.'
 
 

- காக்கை

 
  `ஆங்கென் கிளவி அடையாத் தொடைபட
நீங்கி இசைக்கும் நிலையது தனிச்சொல்.'
 
 

- காக்கை

 
  `ஆசிரியம் வெண்பா எனஇவை தம்முள்
ஒன்றாகி அடிபெற் றிறுதி வருவது
சுழியம் எனப்பெயர்ச் சுரிதக மாகும்.'
 
 

- காக்கை

 
  `விட்டிசை முதற்பாத் தரவடி ஒத்தாங்கு
ஒட்டிய மூன்றிடைத் தாழிசை அதன்பின்
மிக்கதோர் சொல்லாத் தனிநிலை சுரிதகம்
ஆசிரி யத்தொடு வெள்ளை இறுதலென்று
ஓதினர் ஒத்தா ழிசைக்கலிக் குறுப்பே.'
 
 

- அவிநயம்