186

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `தரவுஒன் றாகித் தாழிசை மூன்றாய்
தனிச்சொல் இடைகிடந்து சுரிதகம் தழுவ
வைத்த மரபினது ஒத்தா ழிசைக்கலி.ழு
 
 

- மயேச்சுரம்

 
  `தரவின் அளவின் சுரிதகம் அயற்பா
விரவும் என்பர் ஆசிரியம் வெள்ளை.ழு
 
 

- மயேச்சுரம்

 
  `தரவொன்று தாழிசை மூன்றும் சமனாய்த்
தரவிற் சுருங்கித் தனிநிலைத் தாகிச்
சுரிதகம் சொன்ன இரண்டனுள் ஒன்றாய்
நிகழ்வது நேரிசை ஒத்தா ழிசைக்கலி.ழு
 
 

- யா. வி. 82

 
  `ஈரடி இரண்டும் ஓரடி நான்கும்
முச்சீர் எட்டும் இருசீர் இரட்டியும்
அச்சீர் குறையினும் அம்போ தரங்கம்.ழு

`நீர்த்திரை போல நிரலே முறைமுறை
ஆக்கம் சுருங்கி அசையடி தாழிசை
விட்டிசை விரியத் தொடுத்துச் சுரிதகம்.ழு
தாக்கித் தழுவும் தரவினோ டேனவும்
யாப்புற் றமைந்தன அம்போ தரங்கம்.ழு
 
 

- காக்கை

 
  `தரவே தாழிசை தனிச்சொல் சுரிதகம்
வருவன எல்லாம் தாழிசைக் கலியே.ழு
 
 

- சிறு காக்கை

 
  `சேர்த்திய தரவொடு தாழிசைப் பின்னர்
நீர்த்திரை போல நெறிமையின் சுருங்கி
மூவகை எண்ணும் முறைமையின் வழாஅ
அளவின எல்லாம் அம்போ தரங்கம்.ழு
 
 

 - சிறு காக்கை

 
  `உரைத்த உறுப்பொடு தாழிசைப் பின்னர்
நிரைத்த அடியான் நீர்த்திரை போல
அசையடி பெறின்அவை அம்போ தரங்கம்ழு
 
 

- அவிநயம்

 
  `தாழிசைக் கீறாய் முறைமுறை யானே
ஒன்றினுக் கொன்று சுருங்கும் உறுப்பினது
அம்போ தரங்கஒத் தாழிசைக் கலியே.ழு