செய்யுளியல் - நூற்பா எண் 29 | 187 | | | `தாழிசைப் பின்னர் தனிச்சொல் முன்னர் ஆழ்புனல் திரைபுரை அம்போ தரங்கம் உம்பர் மொழிந்த தாழி சைவழி அம்போ தரங்கம் வண்ணக மாகும்.' `அவையே, தேவ பாணியென்று ஏவவும் படுமே.' `வழிபடு தெய்வம் வழுத்தி வழிமொழியின் தலைஇடை கடையென அம்போ தரங்கம் நிலையின் அவ் வளவின் நிலையுங் காலை அராகம் பேரெண் இடையெண் சிற்றெண் விராக என்ப தாழிசைப் பின்னர் கூறிய தரவே ஆறடித் தாகும்.' `தரவின் வழிமுறை தாழிசை மூன்றும் வரன்முறை பிறழா நாலடிக் குரிய தந்துமுன் நீறீஇத் தரவினில் தாழிசை உறுப்பினும் குணத்தினும் நெறிப்படப் புணரும்.' `தாழிசைப் பின்னர் அராகஅடி இரண்டே அராகத் திறுதி பேரெண் இரண்டு விராக என்ப இரண்டிரண் டடியான் பேரெண் வழியால் இடையெண் ணாலடி நேர வேண்டும் நெறியறி புலவர்.' `பெற்ற நாலடி அரையடி முடிவின சிற்றெண் பகுதி இருநான் காகும்.' `மூவகை எண்ணின் பொருள்வகை முடிவும் யாவகை எண்ணிற்கும் அகப்பட முடியும்.' `சிற்றெண் அகத்தே சேர்க்கப் படுவோன் பெற்றபுகழ் தொடுப்பினும் பிழைப்ப தில்லை.' `அடக்கியல் உறுப்பும் ஆறடித் தாகத் தொடுக்கு மாகின் தொல்லையோர் துணிவே.' | | | |
|
|
|