|
| மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் வண்ணமும் அடியும் தொடையும் மயங்கியும் அடுக்கியல் அந்தம் தொடுத்தன பல்கியும் கலிவயின் கடிந்த சீர்இடை மிடைந்தும் நாற்சீர் இறந்த சீரொடு சிவணியும் முச்சீர் இருசீர் அம்போ தரங்கம் அச்சீர் முடிவிடை அழிவில தழுவியும் கொச்சகக் கலிவயின் கூறவும் படுமே.ழு `தரவே ஆகியும் இரட்டியும் தாழிசை சிலவும் பலவும் மயங்கியும் பாவேறு ஒத்தா ழிசைக்கலிக்கு ஒவ்வா உறுப்பின கொச்சகக் கலிப்பா ஆகும் என்ப.ழு | | | - அவிநயம் | | |
| `தரவே தரவிணை தாழிசை சிலபல வரன்முறை பிறழ அயற்பா மயங்கியும் தனிச்சொல் பலவாய் இடைஇடை நடந்தவும் ஒத்தா ழிசைக்கலி உறுப்பினில் பிறழ்ந்தவும் வைத்தவழி முறையால் வண்ணகம் இறுவாய் மயங்கி வந்தவும் இயங்குநெறி முறையின் கொச்சகக் கலியெனக் கூறினர் புலவர்.ழு | | | - மயேச்சுரம் | | |
| `எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும் இடைநிலை இன்றி எருத்துடைத் தாயும் எருத்தம் இரட்டித்து இடைநிலை பெற்றும் இடையது இரட்டித்து எருத்துடைத் தாயும் இடையும் எருத்தும் இரட்டுற வந்தும் எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய் அடக்கியல் காறும் அமைந்த உறுப்புக் கிடக்கை முறைமையின் கிழமைய தாயும் தரவொடு தாழிசை அம்போ தரங்கம் முடுகியல் போக்கியல் என்றிவை எல்லாம் முறைதடு மாற மொழிந்தவை இன்றி | | |