செய்யுளியல் - நூற்பா எண் 30

197

 

கலிநிலைக் கலித்துறைக்குச் செய்யுள் :

  `யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித்
தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்;
தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்,
கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரிஅன்றே'
 
     
எனவும்,

கலி விருத்தத்திற்குச் செய்யுள் :

  `வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலின்
ஆய்தலின் ஒண்சுடர் ஆழியி னான்தமர்
வாய்தலின் நின்றனர் வந்தென, மன்னன்முன்
நீதலை சென்றுரை; நீள்கடை காப்போய்!'
 
 

- யா. கா. 34 மே.
 - சூளா. 127

 
எனவும் வரும், பிறவும் அன்ன. (30)

விளக்கம்

சிதம்பரச் செய்யுட் கோவை :

ஒருபொரு் மேல் மூன்றடுக்கிய கலித்தாழிசைக்குச் செய்யுள் :

  `செல்லார் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்தெங்கள்
பொல்லா மணியைப் புகழ்மினோ, வம்மின், புலவிர்காள்!'

`முத்தேவர் தேவை முகிலூர்தி முன்னான
புத்தேளிர் போலப் புகழ்மினோ வம்மின், புலவிர்காள்!'

`ஆங்கற் பகக்கன் றளித்தருளும் தில்லைவனப்
பூங்கற் பகத்தைப் புகழ்மினோ, வம்மின், புலவிர்காள்!'
 
 

- சி. செ. கோ. 69

 
  ஈற்றடிமிக்குத் தனியே வந்த கலித்தாழிசைக்குச் செய்யுள்:
`இருகூற் றுருவத் திருந்தண் பொழிற்றில்லை
ஒருகூற்றின் கூத்தை உணராய், மடநெஞ்சே!
ஒருகூற்றின் கூத்தை உணரா யெனின்மற்றப்
பொருகூற்றம் தோற்றப் புலம்பேல், வாழி, மடநெஞ்சே,'
 
 

- சி. செ. கோ. 70