206

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
இது மேல்கூறிய வஞ்சிப்பாவிற்கு இனம் ஆகிய தாழிசை துறை விருத்தங்கள் ஆமாறு
கூறுகின்றது.

     இ-ள் : இருசீரான் ஆகிய நாலடி உடைய செய்யுள் ஒரு பொருள்மேல் மூன்றாய்
வருவன வஞ்சித்தாழிசை ஆதலும், இருசீர் அடி நான்காய்த் தனியே வருவது வஞ்சித்துறை ஆதலும், முறை அமைந்த முச்சீர் அடி நான்காய் நடப்பது
வஞ்சிவிருத்தம் ஆதலும், இலக்கணமாம் என்றவாறு.

வஞ்சித்தாழிசைக்குச் செய்யுள் :

  `மடப்பிடியை மதவேழம்
தடக்கையான் வெயில்மறைக்கும்
இடைச்சுரம் இறந்தார்க்கே
நடக்கும்என் மனனேகாண்.'

`பேடையை இரும்போத்துத்
தோகையான் வெயில்மறைக்கும்
காடகம் இறந்தார்க்கே
ஓடும்என் மனனேகாண்'

`இரும்பிடியை இகல்வேழம்
பெருங்கையான் வெயில்மறைக்கும்
அருஞ்சுரம் இறந்தார்க்கே
விரும்பும்என் மனனேகாண்'
 
 

- யா. கா. 35 மே.

 
எனவும்,

வஞ்சித் துறைக்குச் செய்யுள் :

  `மைசிறந்தன மணிவரை
கைசிறந்தன காந்தளும்
பொய்சிறந்தனர் காதலர்
மெய்சிறந்திலர் விளங்கிழாய்'
 
  - யா. கா. 35 மே.  
எனவும்,