செய்யுளியல் - நூற்பா எண் 32

209

 

வஞ்சி விருத்தத்திற்குச் செய்யுள் :

  `சிந்தடி நான்காய் வருவது வஞ்சியது
எஞ்சா விருத்தம் என்மனார் புலவர்.'
 
 

 - யா. வி. 92

 
  `குறளடி நான்கின மூன்றொரு தாழிசை; கோதில் வஞ்சித்
துறைஒரு வாது தனிவரு மாய்விடின்; சிந்தடி நான்கு
அறைதரு காலை அமுதே! விருத்தம்.'
 
 

- யா. கா. 35

 
  `துன்னுங் குறளடி நான்குவஞ் சித்துறை; சிந்தடிநான்கு
உன்னும்விருத்தம்; துறைமூன்று ஒருபொருள் தாழிசையாம்.'
 
 

- வீ. சோ. 125

 
  `வஞ்சித் தாழிசை வருங்குறள் அடிநான்கு
ஆகித்தான் மூன்றாய் அடுக்கும்ஓர் பொருளே.'
 
 

- தொ. வி. 246

 
  `வஞ்சித் துறைகுறள் அடிநான்கு ஒத்ததே.'  
 

- 242

 
  `விருத்த இலக்கணம் வஞ்சி சிந்தடி.'  
 

- 248

 
  `குறளடி நான்காய் ஒருபொருள் மேல்மூன்று
அடுக்கி வருவது வஞ்சித் தாழிசை.'
 
 

- மு.வீ.யா.செ. 58

 
  `இருசீர் அடிநான் காய்வரல் வஞ்சித்
துறையாம் எனப்பெயர் சொல்லப் படுமே.'
 
 

- 59

 
  `சிந்தடி நான்காய்ச் செய்வது வஞ்சி
விருத்தம் என்மனார் மெய்யுணர்ந் தோரே.'
 
 

- 60

 

32

தளை முதலியன கெடுவழி அலகிடும் முறைமை

742. தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே
குறுகிய இகரமும் குற்றியல் உகரமும்
அளபெடை ஆவியும் அலகுஇயல் பிலாமையும்,
ஐகான் குறுகின் குறில்இயல்பு எய்தலும்,
ஆய்தமும் ஒற்றும் அளவுஎழூஉ நிற்புழி
வேறுஅலகு எய்தும் விதியின ஆதலும்,
ஒற்றுஅளபு எழாவழிப் பெற்றஅலகு இன்மையும்,
பெற்றிஎன்று உரைப்பர் கற்றுணர்ந் தோரே.