செய்யுளியல் - நூற்பா எண் 32

211

 
     இவற்றுள் குற்றியலிகரம் வந்து முறையே ஆசிரியத்தளையும் கலித்தளையும் தட்டு
வெள்ளையுள் பிறதளை விரவா என்னும் இலக்கணத்தோடு மாறுபட்டு வெண்பா அழிய
நிற்றலின், ஈண்டுக் குற்றிய லிகரத்தை இவ் விலக்கணத்தான் அலகு பெறாது என்று
களைய வெண்தளையாம்.
  நேர் நிரை நேர் நேர் நேர் நேர்
`சிறுநன்றி இன்,றிவர்க்,கியாம், செய்தக்கால் நாளைப்
பெறுநன்றி பின்னும் பெரிதென் - றுறுநன்றி
தானவாய்ச் செய்வதூஉம் தானமன் றென்பவே;
வானவாம் உள்ளத் தவர்'
 
 

 - யா. கா. 38 மே.

 
இதனுள் `இன்றிவர்க்கியாஞ் செய்தக்கால்' என்புழிக் குற்றிய லிகரம் வந்து வஞ்சி
உரிச்சீராய் வெள்ளையுள் நிரை ஈற்று உரிச்சீர் விரவா என்னும் இலக்கணத்தோடு
மாறுபட்டு வெண்பா அழிய நிற்றலின், ஈண்டுக் குற்றிய லிகரத்தை இவ்விலக்கணத்தான்
அலகு பெறாது என்று களைய வெண்சீராம்.
  நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
`கொன்,று கோ, டு நீ, டு, குருதிபாயவும்,
சென்,று கோ, டு, நீ, டு, செழுமலைபொருவன
வென்,று, கோ, டு நீ, டு, விறல்வேழம்,
என்,று மூ, டு, நீ, டு, பிடியுளபோலும்,
அதனால்,
இண்டிடை இரவிவண் நசைஇவரின்
வண்டுண் கோதை உயிர்வா ழலளே'
 
 

- யா. கா. 38 மே.

&bsp;
என இக்குறள்அடி வஞ்சிப்பாவினுள் குற்றுகரம் வந்து ஆறசைச்சீர் ஆயின, அவ்வாறு
வருக என்னும் ஓத்து இலாமையால் ஆண்டுக் குற்றுகரங்களை இவ்விலக்கணத்தான்
அலகுபெறா என்று களையச் சீர் சிதையாதாம்.