212 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | | `இடைநுடங்க ஈர்ங்கோதை பின்தாழ வாட்கண் புடைபெயரப் போழ்வாய் திறந்து - கடைகடையின் நேர் நேர் உப்,போஒஒ, எனஉரைத்து மீள்வாள் ஒளிமுறுவற் கொப்போநீர் வேலி உலகு' | | | - யா. கா. 38 மே. | | | இதனுள் உப்போஒஒ என்புழிப் பண்டமாற்றின்கண் அளபெடை வந்து கலித்தளைதட்டு வெண்பா அழிய வந்தமையான் ஈண்டு உயிர்அளபெடையை இவ்விலக்கணத்தான் அலகு பெறாது என்று நெட்டெழுத்தே போலக் கொண்டு அலகிடத் தளை சிதையாதாம். | | நேர் நேர் நேர் `பிண்,ணாக், கோஒஒ, என்னும் பிணாவின் முகத்திரண்டு கண்நாக் குடையனபோல் கட்டுரைக்கும்; - பிண்ணாக்குக் கொள்ளீரோ? என்பாள்தன் கூரெயிறு, காளையரை உள்ளீர்வ போல உள' | | | - யா. வி. 34 மே. | | | எனவும், | | `பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை; பைங்கிளிகள் சொல்லுக்குத் தோற்றின்னம் தோற்றிலவால்;-நெல்லுக்கு நேர் நேர் நேர் நூ,றோஒஒ,நூ, றென்பாள் நுடங்கிடைக்கும் மென்முலைக்கும் மாறோமா லன்றளந்த மண்' | | | - யா. கா. 38 மே. | | | எனவும், | | நிரை நேர் நேர் `களிச்,சாத்,தாஅஅ, என்றியான் கண்காண நின்று விளித்தாலும் வாரான் விரைந்து' | | | - யா. வி. 4 மே. | | | எனவும் வரும். இவற்றுள் பண்டமாற்றின்கண்ணும் விளித்தற் கண்ணும் அளபெடைகள் வந்து வெண்பாவினுள் நாலசைச்சீராய் வண்ணம் அறுக்குங்கால், | | |
|
|