| புணர்ந்தால், புணருந் தொறும்,பெரும் போகம்;பின்னும் புதிதாய், மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல, வளர்கின்றதே' | | | - இ. வி. செ. 19 | | |
என இவ்வாறு ஈரொற்று உடன்நிலையாய் நிற்பினும் அளபு எழாமையின் குற்றெழுத்தின் பயத்தவாய் அலகு பெறாமை காண்க. |
| `ஈர்ஒற்று ஆயினும் மூஒற்று ஆயினும் ஓர்ஒற்று இயல என்மனார் புலவர்' | | | | | |
என்றார் பிறரும் எனக் கொள்க. | (33) |
விளக்கம் |
| `தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே குறுகிய இகரமும் குற்றிய லுகரமும் அளபெடை ஆவியும் அலகியல் பிலவே.' | | | - யா. வி. 4 | | |
| `சீர்தளை சிதைவுழி ஈருயிர்க் குறுக்கமும் நேர்தல் இலவே உயிரள பெடையும்.' | | | - மயேச்சுரம் | | |
| `இஉ இரண்டன் குறுக்கம் தளைதப நிற்புழி ஒற்றாம் நிலையின ஆகும்.' `உயிரள பேழும் உரைத்த முறையான் வருமெனின் அவ்வியல் வைக்கப் படுமே.' | | | - காக்கை | | |
| `உயிரள பெடையும் குறுகிய உயிரின் இகர உகரமும் தளைதபின் ஒற்றாம்; சீர்தப வரினும் ஒற்றியற் றாகும்.' | | | - அவிநயம் | | |
| `ஐந்தா றசையி னருகி உகரத்தின் வந்தசீர் ஒன்றிரண்டு ஒப்பித்து -- நந்துவித்தால் வஞ்சிப்பா விற்கியலு நாலசைச்சீர், வண்ணுரிச்சீர் தங்கி விரவத் தகும்.' `அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே.' | | | - தொ. பொ. 329 | | |