216

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`ஒற்றள பெடுப்பினும் அற்றென மொழிப.ழு  
 

- தொ. பொ. 330

 

 

`ஆய்தமும் ஒற்றும் அளபெழூஉநிற்புழி
வேறலகு எய்தும் விதியின ஆகும்.ழு
 
 

- காக்கை

 

 

`ஒற்றளபு எழாவழிப் பெற்றஅலகு இலவே.ழு

`சீரும் தளையும் சிதையின் சிறியஇஉ அளபோடு
ஆரும் அறிவர் அலகு பெருமை; ஐ காரம்நைவேல்
ஓரும் குறிலியல், ஒற்றள பாய்விடின் ஓரலகாம்;
வாரும் வடமுந் திகழும் முகிழ்முலை வாணுதலே.ழு
 
 

- யா. கா. 38

 

 

`தனிநிலை ஒற்றிவை தாம்அலகு இலவே  
 

- யா. வி. 3; மே.

 

 

அளபெடை அல்லாக் காலை யான.ழு  
 

- யா. கா. 38 மே.

 

 

`ஈரொற் றாயினும் மூவொற் றாயினும்
ஓரொற் றியல என்மனார் புலவர்.ழு
 
 

- யா. கா. 38 மே.

 

 

`அளபெழின் அல்லதை ஆய்தமும் ஒற்றும்
அலகியல்பு எய்தா என்மனார் புலவர்.ழு
 
 

- அவிநயம்

 

 

`தளையும் சீரும் தபவரின் குறுகிய
இஉ ஐயும் இசைபெறா என்ப.ழு
 
 

- மு. வி. யா. ஒ. 1

 

 

`அளபெடை ஆவியும் அவற்றோ ரற்றேழு  
 

- 2

 

 

`ஆய்தமும் ஒற்றும் அளபெழ நிற்புழி
வேறலகு எய்தும் விதியின ஆகும்.ழு
 
 

- 3

 

33

விட்டிசையும் அளபெடையும்

743.

விட்டிசைத் தன்றி முதற்கண் தனிக்குறில்
நேர்ஆ காமையும், நெட்டெழுத்து அளபுஎழின்
நேர்நேர் ஆதலும், குறில்நெடில் அளபுஎழின்
நிலைநேர் ஆதலும், நெறிஎனப் படுமே.
 
     
இது நிறுத்தமுறையானே ஒருசார் அசைகட்கு ஆவது ஓர் இலக்கணம் கூறுகின்றது.