செய்யுளியல் - நூற்பா எண் 35 | 221 | | எல்லாச் சீரும் எல்லாத் தளையும் எல்லாப் பாவினுள்ளும் பா இனத்துள்ளும் புக்கு மயங்கும் எனப்பட்டனவேனும் `வெண்பாவினுள் வஞ்சி உரிச்சீர் வந்து மயங்கா' என வரைந்து ஓதிய வெண்பாவினுள், தனக்கு ஓதிய தளையே அன்றி வேற்றுத்தளை வந்து விரவா என்று சொல்லுதலும், பொருந்திய இலக்கணமாம் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. தாம் என்ற மிகையானே, நேர்ஈற்று இயற்சீர் வெண்கலியுள்ளும் கொச்சகக்கலியுள்ளும் வருதலும், நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் கொச்சகத்து அருகி வருதலும் கொள்க. விலக்கியன வாராமையும் விதித்தன வருதலும் மேல்காட்டிய செய்யுளகத்தும் பிற சான்றோர் செய்யுளகத்தும் கண்டு கொள்க. | | `குலாவணங்கு வில்எயினர் கோன்கண்டன் கொல்லி நிலாவணங்கு வெண்மணல்மேல் நின்று,-புலாலுணங்கல் நே நே நே நேர் கொள்ளும்புள் காக்கின்ற கோ,வின்,மை,யோ, நீபிறர் உள்அம்புக் காப்ப துரை' | | | - யா. கா. 40 மே [கோவின்மையோ என்பதனைத் தேமாந்தண் பூவாகவும் தேமாங்கனியாகவும் கொள்ளலாம்.] | | | என்றல் தொடக்கத்து ஒருசார் வெண்பாவினுள் வஞ்சி உரிச்சீர் வந்ததேனும் திருவள்ளுவப் பயனும் நாலடி நானூறும் முதலாகிய கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரம் முதலாகிய பிறசான்றோர் செய்யுளுள்ளும் வஞ்சி உரிச்சீர் வந்திலாமையானும், வேற்றுத்தளை வெண்பாவினுள் விரவுக என ஓத்து இலாமையானும், இத்தொடக்கத்தன குற்றம் அல்லது குணம் ஆகா என்பதே தொல்லாசிரியர் துணிவு. அதுவே இந்நூலார்க்கும் உடன்பாடு. | | | (35) | |
|
|
|