கலிப்பாவினுள் வெண்பா அடியும் அகவல் அடியும் வந்து மயங்குதலும், வஞ்சிப்பாவினுள் அகவல் அடியும் கலி அடியும் வந்து மயங்குதலும் இவ்விருவகை அடியுமே அன்றி ஒரோவழி வெண்பா அடி வந்து மயங்குதலும், ஒருசார் கலிப்பாவினுள்ளும் ஆசிரியப்பாவினுள்ளும் ஐந்துசீர்அடியும் அருகிவந்து அடுத்தலும் நீக்கும் நிலைமை இன்று ஆராயும் இடத்து என்றவாறு. |
இயற்சீர் வெள்ளடி மயங்கிய ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் : |
| `எறும்பி அளையில் குறும்பல் சுனைய உலைக்கல் அன்ன பாறை ஏறிக் கொடுவில் எயினர் பகழி மாய்க்கும் கவலைத்து என்பஅவர் தேர்சென்ற ஆறே; அதுமற்று அவலம் கொள்ளாது நொதுமல் கழறும்இவ் வழுங்கல் ஊரே' | | | - யா. கா. 41 மே; குறுந். 12 | | |
என வரும். |
| `எறும்பி அளையில் குறும்பல் சுனைய குறுந்தொடி யாம்செல் சுரம்' | | | | | |
என உச்சரித்து வெள்ளடி ஆமாறு கண்டுகொள்க. |
வஞ்சியடி மயங்கிய ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் : |
| `இருங்கடல் தானையொடு பெருநிலம் கவைஇ உடைஇலை நடுவணது இடைபிறர்க் கின்றி தாமே ஆண்ட ஏமம் காவலர் இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக் காடு பதியாகப் போகித் தத்தம் நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே; அதனால், | | | | | |