226

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

நீயும் கேண்மதி! அத்தை, வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி வேய்ந்த முள்ளியம் புறங்காட்டு,
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பிலா அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்குநோக்காது
இழிபிறிப்பினோன் ஈயப்பெற்று,
நிலங்கல னாக விலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே;
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே'
 
 

 - யா. கா. 48 மே; புறநா. 363

 
என வரும். இதனுள்,

     `உப்பிலா அவிப்புழுக்கல்' எனவும் `கைக்கொண்டு பிறக்குநோக்காது' எனவும்
`இழிபிறப்பினோன் ஈயப் பெற்று' எனவும் வஞ்சிஅடி மயங்கி வந்தவாறு காண்க.

வெண்சீர் வெள்ளடி மயங்கிய ஆசிரியத்திற்குச் செய்யுள் :

  `அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப்
பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி,
ஏதில் மாக்களும் நோவர், தோழி,
ஒன்றும் நோவார், இல்லை;
தெண்கடல் சேர்ப்பர் உண்டஎன் நலக்கே'
 
 

- யா. கா. 41 மே.

 
என வரும். இதனுள்,
  `அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப்
பொங்கிய பூசல் பெரிது'
 
     
என்று உச்சரித்து வெள்ளடி ஆமாறு காண்க.

கலிஅடி மயங்கிய ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் :

  `குருகுவெண் டாளி கோடுபுய்த் துண்டென
மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது