செய்யுளியல் - நூற்பா எண் 36

227

 

 

மருள்பிடி திரிதரும் சாரல்
அருளான் ஆகுதல், ஆயிழை! கொடிதே.'
 
 

 - யா. கா. 41 மே.

 
எனவரும் இதனுள்,

 

`மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது
தீவழங்கு சுழல்விழிக்கண் சீயம்சென் றுழலுமே'
 
     
என்று உச்சரித்துக் கலிஅடி ஆமு£று காண்க.

வெண்பா அடியும் ஆசிரிய அடியும் மயங்கிய கலிப்பாவிற்குச் செய்யுள் :

 

`காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்'  
     
என்னும் குறிஞ்சிக்கலியான் (3) உணர்க. இம்மயங்கிசைக் கொச்சகத்துள் வெண்பா
அடியும் ஆசிரிய அடியும் மயங்கிவந்தவாறு கண்டுகொள்க.

 

`நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்'  
 

- பட். 22

 
என ஆசிரிய அடியும்,

 

`வயலாமைப் புழுக்குண்டு வறளடும்பின் மலர்மலைந்து'  
 

- பட். 22

 
எனக் கலி அடியும்,

 

`கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை'  
 

- பட். 23

 
என வெள்ளடியும் பட்டினப்பாலை என்னும் வஞ்சி நெடும்பாட்டினுள் மயங்கி வந்தவாறு
காண்க.

ஐஞ்சீர் அடியான் வந்த கலிப்பாவிற்குச் செய்யுள் :

 

`அணிகிளர் பொறிஅவிர் துத்திமா நாகத் தெருத்தேறித்
துணிஇரும் பனிமுந்நீர் தொட்டுழந்து மலைந்தனையே'
 
 

- யா. கா. 42 மே.

 
எனவும்,

ஐஞ்சீர் அடியான் வந்த ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் :

 

`உமணர்ச் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்துறை
ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காட்டு