228

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

இன்னா என்றி ராயின்,
இனியவோ? பெரும! தமியோர்க்கு மனையேழு
 
 

 - யா. கா. 42 மே; குறுந். 142

 
என வரும். பிறவும் அன்ன. (36)

விளக்கம்

`காமர் கடும்புனல்ழு என்ற மயங்கிசைக் கொச்சகம் :

  `காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்
தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலான்
நீணாக நறும்பைந்தார் தயங்கப்பாய்ந் தருளினால்
பூணாகம் உறத்தழீஇப் போதந்தான் அகனகலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால் என்தோழி
அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே.ழு

`அவனுந்தான்,
ஏனல்இதணத் தகிற்புகை உண்டியங்கும்
வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத்
தேனின் இறாலென ஏணி இழைத்திருக்கும்
கானக நாடன் மகன்.ழு

`சிறுகுடி யீரே! சிறுகுடி யீரே!
வள்ளிகீழ் வீழா; வரைமிசைத் தேன்தொடா;
கொல்லை குரல்வாங்கி ஈனா; மலைவாழ்நர்
அல்ல புரிந்தொழுக லான்.ழு

`காந்தள் கடிகமழும் கண்வாங்கு இருஞ்சிலம்பின்
வாங்கமை மென்தோள் குறவர் மடமகளிர்
தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலால் தம்மையரும்
தாம்பிழையார் தாம்தொடுத்த கோல்;ழு
`எனவாங்கு,
அறத்தொடு நின்றேளைக் கண்டு திறப்பட
என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்.ழு