| `ஆசிரிய நடைத்தே வஞ்சி என்ப' | | | - தொல். பொ. 420 | | |
எனவும், |
| `நெடுவெண் பாட்டே முந்நான்கு அடித்தே' | | | - 470 | | |
எனவும், |
| `கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள் செவியறி வாயுறை புறநிலை எனஇவை தொகைநிலை வகையான் அளவில என்ப' | | | - 472 | | |
எனவும், |
| `முடிபொருள் அல்லாது அடிஅளவு இலவே' | | | - யா. வி. 32 மே. | | |
எனவும், ஆசிரியர் தொல்காப்பியனார் பொதுவும் சிறப்பும் உடன் கூறினமையான் அக்கருத்தே பற்றிக் கூறியவாறு என்று உணர்க. |
ஈரடியான் வந்த வெண்பாவிற்குச் செய்யுள் : |
| `அறத்தா றிதுவென வேண்டா; சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை.' | | | - யா. கா. 15 மே; குறள் 37 | | |
எனவும், |
மூன்று அடியான் வந்த ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் : |
| `முதுக்குறைந் தனளே, முதுக்குறைந் தனளே, மலையன் ஒள்வேல் கண்ணி முலையும் வாரா; முதுக்குறைந் தனளே.' | | | - யா. கா. 15 மே. | | |
எனவும், |
மூன்று அடியான் வந்த வஞ்சிப்பாவிற்குச் செய்யுள் : |
| `செங்கண்மேதி கரும்புழக்கி அங்கண்நீலத் தலரருந்தி பொழிற்காஞ்சி நிழற்றுஞ்சும் செழுநீர் | | | | | |