240

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  குறளடி ஓரடி நானான்கும் சிற்றெண்
எட்டும் நானான்கும் நான்கும் எட்டுமாய்ச்
சுருங்கவும் அந்நால் துணைஉறுப்பு உடைத்தே.'
 
 

- தொ. வி. 231

 
  `அம்போ தரங்க வண்ணகஒத் தாழிசைக்
கலியல் லாத கலிப்பா வினுக்குத்
தரவு மூன்றடி சிறுமை, பெருமை
உரைப்போன் குறிப்பின ஆம்அள வின்றே.'
 
 

 - மு. வீ. யா. ஒ. 19

 
  `அம்போ தரங்க வண்ணகக் குஞ்சிறுமை
பெருமை தரவுஇலை, பேசுங் காலை
ஆறடி என்மனார், அறிந்திசி னோரே.'
 
 

- மு. வி. யா. ஒ. 20

 

                                                38

சில தொடை விகற்பங்கள்

748. வருக்கமும் நெடிலும் இனமும் வரினும்
திறப்படும் எதுகையும் மோனையும் ஆதலும்,
உயிரும் யரலழ ஆசும் இடையிட்டும்
இரண்டடி மூன்றாம் எழுத்துஒன்றி வரினும்
எதுகை ஆதலும், இரணத் தொடைக்கும்
கடையே கடையிணை பின்கடைக் கூழை
இடைப் புணர்பு இசைதலும் இசையும் என்ப.
 
     
இஃது ஒருசார் தொடைகட்கு எய்தியதோர் இலக்கணம் கூறுகின்றது.

     இ-ள் : வருக்க எழுத்தும் நெடில் எழுத்தும் இன எழுத்தும் எதுகையும்
மோனையுமாய் வந்தாலும் கூறுபட வரும் வருக்க எதுகையும் வருக்க மோனையும்
நெடில் எதுகையும் நெடில் மோனையும் இன எதுகையும் இன மோனையும் ஆதலும்,