242

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  போகாது வழங்கும் ஆரிருள் நடுநாள்,
பௌவத் தன்ன பாயிருள் நீந்தி,
இப்பொழுது வருகுவை ஆயின்,
நற்றார் மார்ப! தீண்டல்எம் கதுப்பேழு
 
 

- யா. கா. 43 மே.

 
எனவும்,

நெடில் எதுகைக்குச் செய்யுள் :

  `ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் ஒருசாரார்;
கூகூ என்றே கூவிளி கொண்டார் ஒருசாரார்;
மாமா என்றே மாய்ந்தனர் நீந்தார் ஒருசாரார்;
ஏகீர் நாய்கீர், என்செய்தும் என்றார், ஒருசாரார்ழு
 
 

- யா. கா. 43 மே.

 
எனவும்,

நெடில் மோனைக்குச் செய்யுள் :

  `ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமைழு
 
 

- யா. கா. 34 மே; முதுமொழி 1

 
எனவும் வரும்.

     இன எதுகை மூன்று வகைப்படும்; வல்லின எதுகையும் மெல்லின எதுகையும்
இடையின எதுகையும் என. அவற்றுள், வல்லின எதுகைக்குச் செய்யுள் :
  `தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்ழு
 
 

 - குறள் 114

 
எனவும், [ககர ஒற்றும் சகர ஒற்றும்]

மெல்லின எதுகைச் செய்யுள் :

  `அன்பீனும் ஆர்வ முடைமை; அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.ழு
 
 

 - குறள் 74

 
எனவும், [னகர ஒற்றும் ணகர ஒற்றும்]