244

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

ரகர ஆசுஇடை எதுகைக்குச் செய்யுள் :

  `மாக்கொடி யால்நையும் மௌவல் பந்தரும்
கார்க்கொடி முல்லையும் கமழ்ந்து, மல்லிகைப்
பூக்கொடிப் பொதும்பரும், கான ஞாழலும்,
தூக்கடி கமழ்ந்து, தான் துறக்கம் ஒத்ததே'
 
 

 - சூளா. நா. 29

 
எனவும்,

லகர ஆசுஇடை எதுகைக்குச் செய்யுள் :

  `ஆவே றுருவின ஆயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்; - பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு'
 
 

- நாலடி 118

 
எனவும்,

ழகர ஆசுஇடை எதுகைக்குச் செய்யுள் :

  `அந்தரத் துள்ளே அகங்கை புறங்கையாம்;
மந்தரமே போலும் மனைவாழ்க்கை - மந்தரத்து
வாழ்கின்றேம் என்று மகிழன்மின்; வாழ்நாளும்
போகின்ற பூளையே போன்று'
 
 

- யா. கா. 43 மே.

 
எனவும் வரும்.
  `ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை'
 
 

- முதுமொழி 1

 
இது ரகரஒற்று ஆசுஇடையிட்ட வல்லின எதுகை. பிறவும் வந்துழிக் காண்க.
[க-த-வல்லின எதுகை]

இடையிட்ட எதுகைக்குச் செய்யுள் :

  `தோடார் எல்வளை நெகிழ நாளும்,
நெய்தல் உண்கண் பைதல கலுழ,
வாடா அவ்வரி புதைஇப் பசலையும்
வைகல் தோறும் பைபயப் பெருகின;
நீடார் இவரென நீமனங் கொண்டார்