செய்யுளியல் - நூற்பா எண் 39

245

 

இடையின எதுகைக்குச் செய்யுள் :

 

கேளார் கொல்லோ? காதலந், தோழி !
வாடாப் பௌவம் அறமுகந் தெழிலி
பருவம் பொய்யாது வலனேர்பு வளைஇ,
ஓடா மலையன் வேலின்
கடிது மின்னும்;இக் கார்மழைக் குரலே'
 
 

 - யா. கா. 143 மே.

 
என வரும்.

இரண்டடி எதுகைக்குச் செய்யுள் :

 

`துவைக்கும் துளிமுந்நீர்க் கொற்கை மகளிர்
அவைப்பதம் பல்லிற்கு அழகுஒவ்வா முத்தம்;
மணங்கமழ்தார் அச்சுதன் மண்காக்கும் வேலின்
அணங்கும், அமுதமும், அந்நலார் பாடல்'
 
 

 - யா. கா. 143 மே.

 
என வரும்.

ஒன்று என முடித்தலான் இரண்டடிமோனையும் வரும்; அதற்குச் செய்யுள்:

 

`ஆகங் கண்டக ராலற்ற ஆடவர்
ஆகங் கண்டகத் தாலற்ற அன்பினர்,
பாகங் கொண்டு பயோதரம் சேர்த்தினார்;
பாகங் கொண்டு பயோதரம் நண்ணினார்'
 
 

 - யா. கா. 43 மே.

 
என வரும்.

மூன்றாம் எழுத்து ஒன்று எதுகைக்குச் செய்யுள் :

 

`பவழமும் பொன்னும் குவைஇய முத்தின்
திகழரும் பீன்றன புன்னை'
 
 

 - யா. கா. 43 மே.

 
என வரும். [ழகரம் எதுகை]

     இங்ஙனம் ஒருசார் உயிர்எதுகை முதலாயின வருதல் உளவாயினும் பெரியதொரு
சிறப்பில எனக் கொள்க.