செய்யுளியல் - நூற்பா எண் 39

247

 

இடையின எதுகைக்குச் செய்யுள் :

 

மாலை தொடுத்த கோதையும் கமழ,
மாலை வந்த வாடை
மாயோள் இன்னுயிர்ப் புறத்திறுத் தற்றே'
 
 

 - யா. கா. 43 மே.

 
எனவும்,

     [அடிதோறும் முதலெழுத்து ஒத்துவரும் அடிமோனை இடையாகுமோனை
ஆயிற்று. வருக்கமோனை கடையாகுமோனை]

கடையாகுமோனைக்குச் செய்யுள் :

 

`பகலே, பல்பூங் கானல் கிள்ளை ஓப்பியும்
பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇப்
பின்னுப்பிணி அவிழ்ந்த நன்னெடுங் கூந்தல்
பீர்ங்கப் பெய்து தேம்படத் திருகி,
.........தீண்டல்எங் கதுப்பே'
 
 

- பக்கம் 241

 
எனவும் வரும்.

     இன்னும் அதனானே விட்டிசை வல்லொற்று எதுகை என்றும் விட்டிசைமோனை
என்றும் கோடலும் ஒன்று.

விட்டிசை வல்லொற்று எதுகைக்குச் செய்யுள் :

 

`பற்றிப் பலகாலும் பால்மறி உண்ணாமை
நொ-அலையல் நின்ஆட்டை நீ'
 
 

 - யா. கா. 43 மே.

 
[`பற் `றென வல்லொற்றால் விட்டிசைத்ததுபோல நொ என்பது விட்டிசைத்தமை காண்.]

எனவும்,

விட்டிசை மோனைக்குச் செய்யுள் :

 

`அஅவனும் இஇவனும் உஉவனும் கூடியக்கால்
எஎவனை வெல்லார் இகல்'
 
 

 - யா. கா. 43 மே.

 
     [முதலெழுத்து ஒவ்வாதேனும் விட்டிசைத்தல் மாத்திரையே ஒத்தபடி]

எனவும் வரும். இவை வல்லொற்று அடுத்தாற்போல விட்டிசைத்துக் குற்றெழுத்தினோடு
புணர்ந்தமையான்