| `அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்' | | | - குறள் 64 | | |
[`கண்ணுதல் காட்சி கிடைத்த விழிக்கில்லை வெல்கூற்றின் தோற்றம் கொளல்' என்பது சிதம்பரச் செய்யுட் கோவையின் மூன்றாம் செய்யுள்.] எனவும் வரும். பிறவும் அன்ன. |
வழி எதுகைக்குச் செய்யுள் : |
| `மண்டலம் பண்டுண்ட திண்டேர் வரகுணன் தொண்டியின்வாய்க் கண்டலந் தண்டுறைக் கண்டதொன் றுண்டு கனமகர குண்டலம் கெண்டை இரண்டொடும் தொண்டையும் கொண்டொர்திங்கள் மண்டலம் வண்டலம் பக்கொண்டல் தாழ வருகின்றதே' | | | - யா. கா. 43 மே. | | |
எனவும், |
| `கொங்கு தங்குகோதை ஓதி மாத ரோடு கூடும் நீடும் ஓடை நெற்றி வெங்கண் யானை வேந்தர் போந்து, வேத கீத நாத ! என்று நின்று தாழ, அங்க பூர்வம் ஆதி யாய ஆதி நூலின் நீதி ஓதும் ஆதி யாய செங்கண் மாலைக் காலை மாலை சேர்நர், சேர்வர் சோதி சேர்ந்த சித்தி தானே' | | | - யா. கா. 43 மே. | | |
எனவும் வரும். இதனை வடநூலார் அநுப்பிராசம் என்பர். |
வழி முரணுக்குச் செய்யுள் : |
| `செய்யவாய்ப் பசும்பொன் ஓலைச் சீறடிப் பரவை அல்குல் ஐயநுண் மருங்குல் நோவ அடிக்கொண்ட குவவுக்கொங்கை வெய்யவாய்த் தண்ணென் நீலம் விரிந்தென விலங்கிநீண்ட மையவாம் மழைக்கண் கூந்தல் மகளிரை வருக என்றான்' | | | - சூளா. சீய. 101 | | |
எனவும், |