|
| `ஒருமால் வரைநின் றிருசுட ரோட்டிமுந் நீர்க்கிடந்த பெருமா நிலனுஞ் சிறுவிலைத் தாவுண்டு; பேதையர்கண் பொருமா தவித்தொங்கல் எங்கோன் புரவலன் பூம்பொதியில் கருமா விழிவெண்பல் செவ்வாய் பசும்பொற் கனங்குழைக்கேழு | | | - யா. கா. 43 மே. | | |
எனவும், |
கடை முரண் தொடைக்குச் செய்யுள் : |
| `கயல்மலைப் பன்ன கண்இணை கரிதே; தடமுலைத் திவழும் தனிவடம் வெளிதே; நூலின் நுண்ணிடை சிறிதே; ஆடமைத் தோளிக்கு அல்குலோ பெரிதேழு | | | - யா. கா. 42 மே. | | |
எனவும் வரும். இஃது அடிதோறும் கடைச்சீர் மறுதலைப்படத் தொடுத்தமையால் கடைமுரண் ஆயிற்று. |
கடைஇணை முரண் தொடைக்குச் செய்யுள் : |
| `மீன்தேர்ந்து வருந்திய கருங்கால் வெண்குருகு தேனார் ஞாழல் விரிசினைக் குழூஉம் தண்ணந் துறைவன் தவிர்ப்பவும் தவிரான்; தேரோ காணலம்; காண்டும். பீரேர் வண்ணம்என் சிறுநுதல் பெரிதே.ழு | | | - யா. கா. 42 மே. | | |
என வரும். இஃது அடிதோறும் கடை இருசீரும் மறுதலைப்படத் தொடுத்தமையான் கடைஇணை முரண் ஆயிற்று. |
பின் முரண் தொடைக்குச் செய்யுள் : |
| `சாரல் ஓங்கிய தடந்தாள் தாழை கொய்ம்மலர் குவிந்து, தண்ணிழல் விரிந்து, தமியம் இருந்தன மாக, நின்றுதன் நயனுடைப் பணிமொழி நன்குபல, பயிற்றி, வீங்கு தொடிப் பணைத்தோள் நெகிழத் துறந்தோன், நல்லன்; எம் மேனியோ தீதே.ழு | | | - யா. கா. 42 மே. | | |
என வரும். இது கடைச்சீரும் இரண்டாம் சீரும் மறுதலைப்படத் தொடுத்தமையால் பின் முரண் ஆயிற்று. |