செய்யுளியல் - நூற்பா எண் 39

251

 

கடைக்கூழை முரண் தொடைக்குச் செய்யுள் :

 

`காவியங் கருங்கண் செவ்வாய்ப் பைந்தொடி
பூவிரி சுரிமென் கூந்தலும்,
வேய்புரை தோளும், அணங்குமால் எமக்கே'
 
 

 - யா. கா. 42 மே.

 
என வரும். இது முதல்அடி நான்கு சீரினும் முதற்சீர் ஒழித்து ஒழிந்த மூன்று
சீர்க்கண்ணும் மறுதலைப்படத் தொடுத்தமையான் கடைக்கூழை முரண் ஆயிற்று.

இடைப்புணர் முரண் தொடைக்குச் செய்யுள் :

 

`போதுவிரி குறிஞ்சிப் பெருந்தண் மால்வரைக்
கோதையில் தாழ்ந்த ஓங்குவெள் அருவி
காந்தளஞ் செங்குலைப் பைங்கூ தாளி
வேரல் விரிமலர் முகையொடு விரைஇப்
பெருமலைச் சீறூர் இழிதரும் நலங்கவர்ந்(து)
இன்னா ஆயின இனியோர் நாட்டே'
 
 

- யா. கா. 42 மே.

 
என வரும். இஃது இடை இருசீர்க்கண்ணும் முரணத் தொடுத்தமையாான் இடைப்புணர்
முரண் ஆயிற்று.

     இரணத்தொடைக்கும் என்ற உம்மையால் ஒழிந்த தொடைக்கும்,

     கடைமோனை கடைஇணைமோனை பின்மோனை கடைக்கூழை மோனை
இடைப்புணர்மோனை எனவும்,

     கடை இயைபு கடைஇணைஇயைபு பின்இயைபு கடைக்கூழைஇயைபுடைப்புணர்
இயைபு எனவும்,

     கடைஎதுகை கடைஇணைஎதுகை பின்எதுகை கடைக்கூழைஎதுகை இடைப்புணர்
எதுகை எனவும்,