செய்யுளியல் - நூற்பா எண் 39

253

 

 

`முதலெழுத் தொன்றி முடிவதுமோனை
ஏனையது ஒன்றின் எதுகைத் தொடையே.'
 
 

- சிறுகாக்கை

 

 

`உறுப்பின் ஒன்றின் விகற்பமும் அப்பால்
நெறிப்பட வந்தன நேரப் படுமே.'
 
 

 - சிறுகாக்கை

 

 

`இரண்டடி எதுகை திரண்டொருங் கியன்றபின்
முரண்ட எதுகை இரண்டில வரையார்.'
`அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளவாம்
இகரமோ டீகாரம் எஏ - உகரமோ
டூகாரம் ஒஓ ஞநமவ தச்சகரம்
ஆகாத அல்லா அநு.'

`கடையிணை பின்முரண் இடைப்புணர் முரணென
இவையும் கூறுப ஒருசா ரோரே.'
 
 

 - யா. வி. 39

 

 

`வருக்க நெடிலினம் வந்தால் எதுகையு மோனையுமென்று
ஒருக்கப் பெயரான் உரைக்கப் படும்உயிர் ஆசிடையிட்டு
இருக்கும் ஒருசார் இரண்டடி மூன்றாம் எழுத்தொன்றின்
நிரக்கும் எதுகையென் றாலும் சிறப்பில; நேரிழையே.
 
 

43

 

 

`கருதின் கடையே, கடையிணை, பின்கடைக் கூழையுமென்று,
இரணத் தொடைக்கும் மொழிவர், இடைப்புணர்
                                     என்பதுவே.'
 
 

- 42

 

 

`ஏன்றா முதலள வொத்திரண் டாமெழுத் தொன்றிவரின்
சான்றா ரதனை எதுகையென் றோதுவர்; தன்மைகுன்றா
மூன்றாவ தொன்ற லிரண்டடி ஒன்றல் முழுதுமொன்றல்
ஆன்றா இனமுயி ராசிடை யாய்வரும், ஆங்கதுவே.'
 
 

 - வீ. சோ. 111

 

 

`தலையாகு எதுகை தன்சீர் முழுதுறல்
இடைகடை அவ்வவ் வெழுத்துஒன் றுவதே.'
 
 

- தொ. வி. 215

 

 

`மூன்றாம் எழுத்தொன்றல் ஆசுஇனம் தலையாகு
இடைகடை ஆறும் எதுகை வகையே.'
 
 

- 214